முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றான Vivo தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Vivo Y30 Standard Edition எனும் இக் கைப்பேசியானது 6.51 அங்குல அளவுயை HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Helio P35 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.
மேலும் பல மணி நேரம் சார்ஜ் வழங்கக்கூடிய வகையில் 5000 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 215 டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.