புயலுக்கு 'ஓகி' என்ற பெயர் வைத்தது எப்படி?

Report Print Samaran Samaran in இயற்கை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது, இந்த புயலுக்கு வங்கதேசம் ஓகி என்று பெயர் சூட்டியிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி வங்கதேசத்தை கடந்த மே மாதம் உலுக்கிய புயல் மோரா, இப்பெயரை இந்தோனேஷியா சூட்டியிருந்தது.

இதற்கு அடுத்ததாக அந்த மண்டலத்தில் உருவாகும் புயலுக்கு பெயர் சூட்டும் உரிமையை வங்கதேசம் பெற்றது, அப்போது ஓகி என பெயர் சூட்டுவதாக அறிவித்திருந்தது.

இதன்படி ஓகி என பெயர் சூட்டப்பட்டுள்ளது, இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்