340 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய வட கொரியா சர்வாதிகாரி

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

வட கொரியா நாட்டின் சர்வாதிகாரியான கிம் யோங் அன் பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை 340 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியா நாட்டை சேர்ந்த Institute for National Security Strategy (INSS) என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வட கொரியா சர்வாதிகாரியாக கிம் யோங் அன் பதவியேற்ற 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 340 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 140 நபர்கள் அரசாங்கத்தின் முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் எனவும் தெரியவந்துள்ளது.

INSS நிறுவனத்தை சேர்ந்த புரூஸ் பென்னெட் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘தனது தந்தையிடம் இருந்து ஆட்சியை பெற்ற பிறகு கிம் யோங் அன் அவருடைய தந்தையை விட கொடூரமான செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

உதாரணத்திற்கு, அரசாங்கத்திற்கு துரோகம் இழைத்ததாக பலருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்.

மேலும், அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் சதி வேலை நடக்க கூடாது என்பதற்காக தனது 5 ஆண்டுகால ஆட்சியில் 5 முறை அமைச்சரவையை மாற்றியுள்ளார்.

ஆனால், இவரது தந்தை தனது 17 ஆண்டுகால ஆட்சியில் 3 முறை மட்டுமே அமைச்சரவையை மாற்றினார்.

வட கொரியா நாட்டில் சந்தேகத்திற்குரிய மரண தண்டனைகளும் மனித உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக புரூஸ் பென்னெட் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments