கடவுளை முட்டாள் எனக் குறிப்பிட்ட நடிகர்: வழக்கு பதிவு செய்த பொலிசார்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஐயர்லாந்து நாட்டை சேர்ந்த நடிகர் ஒருவர் கடவுளை முட்டாள் எனக் குறிப்பிட்டு அவமதித்த குற்றத்திற்காக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயர்லாந்து நாட்டை சேர்ந்த Stephen Fry என்பவர் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார்.

மதம் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன’? என்ற அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகரிடம் தொகுப்பாளர் சர்ச்சைக்குரிய சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அப்போது, ‘கடவுள் உங்கள் முன் தோன்றினால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?’ என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நடிகர் பதிலளித்தபோது, ‘துன்பங்கள் நிறைந்து காணப்படும் இதுபோன்ற உலகை ஏன் படைத்தீர்கள்? நீதியும் நேர்மையும் இல்லாத இந்த உலகை படைத்த முட்டாள் கடவுளை நான் ஏன் மதிக்க வேண்டும்?

இந்த உலகை கடவுள் தான் படைத்தார் என்றால், நமது வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஏன்? எதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூரமான எண்ணம் கொண்டவர் கடவுளாக இருக்க முடியுமா? என நடிகர் சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரின் இக்கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. பலத்த கண்டனங்களை தொடர்ந்து தற்போது நடிகர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், நடிகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25,000 யூரோ அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments