வட கொரியா பெற்றோருக்கு பிறந்தவர் தென் கொரியா ஜனாதிபதியாக பதவியேற்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

தென் கொரியாவில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே-இன் என்பவர் பதவியேற்றுள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் பெண் ஜனாதிபதியான Park Geun-hye என்பவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து அவரது பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேதலில் மூன் ஜே-இன் 41.1 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 25.5 சதவிகித வாக்குகளுடன் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலை வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மூன் ஜே-இன் பதவியேற்றுக்கொண்டார்.

அடிப்படையில் மனித உரிமை வழக்கறிஞரான இவர், வட கொரியாவில் இருந்து புகலிடம் கோரி தென் கொரியாவிற்கு வந்த அகதி பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய முதல் உரையை தொடங்கிய ஜனாதிபதி கொரியா தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள தயார் என உறுதியளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விவகாரங்களை அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள தயார் எனவும், இதற்காக அமெரிக்கா, சீனா ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல், வட கொரியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளதாகவும் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments