வடகொரியாவின் கிம் ஜோங் உன் சர்வாதிகாரியாக மாறியது எப்படி?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியாவின் மூன்றாவது தலைமுறை தலைவர் கிம் ஜோங் உன். இவரது ஆட்சியின் கீழ் வடகொரியா தொடர்ந்து அணுவாயுத சோதனையை மேற்கொண்டு வருகிறது.

கிம் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, வடகொரிய சர்வாதிகாரி Kim Jong Il மற்றும் Ko Young Hee தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

இவர் பிறந்தது 1982 என்ற போதும், அரசியல் காரணங்களுக்காக 1984 என பின்னர் பிரகடப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் 1984 ஆம் ஆண்டையே அதிகாரப்பூர்வ ஆண்டாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கருத்தில் கொண்டுள்ளன.

கிம் ஜோங் உன் தனது பள்ளிப்படிப்பை சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மாகாணத்தில் முடித்துள்ளார்.

பெரும்பாலும் வீட்டிலேயே தங்கிவிடும் கிம் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் என அவரது பள்ளிப்பருவ தோழர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய பின்னர் கிம் ஜோங் வடகொரியாவில் உள்ள ராணுவ கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றுள்ளார்.

இதனிடையே 2011 ஆம் ஆண்டு மாரடைப்பால் அவரது தந்தை இறக்கவும் 30 வயதேயான கிம் ஜோங் அரசியல் மற்றும் உலகின் நான்காவது பெரிய ராணுவத்திற்கும் தலைமை பொறுப்புக்கு வந்தார்.

கிம்மின் நம்பிக்கைக்குரிய முக்கிய ஆலோசகராக அவரது உறவினர் Kim Kyong Hui மற்றும் அவரது கணவர், Jang Sung Taek ஆகிய இருவரும் இருந்து வந்தனர்.

இதனிடையே 2013 ஆம் ஆண்டு தமது ஆலோசகராக இருந்து வந்த Jang Sung Taek குடும்பத்தையே படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் கட்டுப்பாட்டை அந்த குடும்பம் ராணுவ உதவியுடன் கைப்பற்ற முனைவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே கிம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ராணுவ தளபதி ஒருவரால் கிம் ஜோங் மீது படுகொலை முயற்சி நடத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய கிம், அதன் பின்னர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் கிம் மீதான படுகொலை முயற்சிக்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் உளவாளிகளே காரணம் என நம்பிய அவர், இந்த இரு நாடுகளின் மீதும் அணுவாயுத தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதுமுதல் கிம் ஜோங் அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகள் அனைத்தும் அதிரடியாக அமைந்ததாக கூறும் ஆய்வாளர்கள், இந்த இரு நாடுகள் மீதும் வடகொரிய மக்களும் வெறுப்பை வளர்க்கும் வகையில் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers