ஏமனில் உடனடியாக உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகளவில் இதுவே மிகப்பெரிய பஞ்சமாக இருக்கும் என ஐ.நா சபையின் மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதற்கு ஈரான் உதவி புரிவதாக சவுதி குற்றம் சுமத்தியதுடன் ஏமன் எல்லைகளையும் மூடியது.
ஏற்கனவே உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் சவுதியின் இந்த நடவடிக்கை பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஏமனில் உடனடியாக உதவி நடவடிக்கைகளை தொடங்கா விட்டால் உலகளவில் இதுவே மிகப்பெரிய பஞ்சமாக இருக்கும் என மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரையிலும் 8670 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 49,960 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.