வடகொரியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா: அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை தவறானது என்று கூறி சீனா அதனை நிராகரித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் வடகொரியா வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங் கூறும்போது, ''உள்நாட்டு சட்டங்கள் மூலம் ஒரு தலைப்பட்சமாக பொருளாதாரத் தடை விதிக்கும் எந்த ஒரு நாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய பொருளாதாரத் தடை தவறானது'' என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

இந்நிலையில் கடந்த 3-ம் திகதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

இதையடுத்து, கடந்த 11-ம் திகதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்