மக்கள் மீது கண்மூடித்தனமாக மோதிய பேருந்து..5 பேர் பலி: 15 பேர் படுகாயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியதால் 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருக்கும் Slavyansky Boulevard இரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று பேருந்து மக்கள் மீது மோதியதால், 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பேருந்து தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மக்கள் மீது மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் இருப்பினும் இந்த விபத்திற்கான முழுமையான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்