கொள்ளை போன உலகின் விலை உயர்ந்த மது பாட்டில்: விலை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

டென்மார்க் பாரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வோட்கா மது பாட்டிலை பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது.

இங்கு ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார்.

பாட்டில் மூடியில் ரஷியாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளதோடு அதன் மீது விலை உயர்ந்த வைரமும் பதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விலை மதிப்புமிக்க மது பாட்டில் சில தினங்களுக்கு முன்னர் முகமூடி அணிந்த மர்ம மனிதரால் கொள்ளையடிக்கப்பட்டது.

பாரின் பூட்டை சாவி மூலம் திறந்து உள்ளே இருந்த பாட்டிலை திருடிச் சென்றது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

மது பாட்டில் மீது இன்ஷூரன்ஸ் செய்யாத நிலையில் அதன் உரிமையாளர் பொலிசாரிடம் புகார் அளித்தார்.

பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கட்டுமான பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குறித்த மது பாட்டிலை அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். கொள்ளையர்கள் பாட்டிலில் உள்ள மதுவை குடித்து விட்டு வெறும் பாட்டிலை மட்டும் விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers