47 பேரின் குடியுரிமை பறிப்பு: இருவருக்கு மரண தண்டனை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு காரணமாக பஹ்ரைன் நாட்டில் 47 பேரின் குடியுரிமையை பறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பில் பஹ்ரைன் நாட்டில் 58 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து பஹ்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் 47 பேரின் குடியுரிமையை பறித்த நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை அளித்துள்ளது.

குடியுரிமை பறிக்கப்பட்ட நபர்களில் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும், 37 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

குற்றம்சாடாப்பட்ட நபர்கள் அனைவரும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் எனவும்,

பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், அரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக போராடிய அப்பாவி எதிர்க்கட்சிகள் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஈரான் ஆதரவு போராளிகளே நாட்டின் அமைதியை குலைப்பதாக பஹ்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers