தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

Report Print Athavan in ஏனைய நாடுகள்
54Shares
54Shares
lankasrimarket.com

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமிழ், சிங்களம், வங்க தேசம் ஆகிய மூன்று புத்தாண்டுகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆண்டுகள் அறுபதில் 32வது ஆண்டான விளம்பி இன்று பிறந்திருக்கிறது . தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி சிங்கள புத்தாண்டு, வங்கதேச புத்தாண்டு ஆகிய மூன்றும் ஒரே நாளில் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் ஜே. சுல்லிவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் தமிழ் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் சிங்கள மக்களுக்கும், வங்கதேச புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும் எனவும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அனைவரும் பயணிக்கவும் அந்த அறிக்கையில் வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்