சிரியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்: அதிகரிக்கும் போர் அபாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
11Shares
11Shares
lankasrimarket.com

அமெரிக்க கூட்டுப்படைகளின் சமீபத்திய தாக்குதலுக்கு பின்னர் சிரியா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடுத்துள்ளது.

ஆனால் குறித்த ஏவுகணை தாக்குதலை சிரியாவின் பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் ஹோம்ஸ் பகுதியை குறிவைத்து குறித்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.10 மணியளவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சிரியாவின் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அப்பகுதில் அமைந்துள்ள ராணுவ விமானத்தளத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்களில் பலரும் குறித்த ஏவுகணை தாக்குதல் தொடர்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

லெபனான் பகுதியில் இருந்து சிரியா வான் எல்லைக்குள் திடீரென்று பறந்து வந்த விமானங்கள் குறித்த தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன.

சிரிய ராணுவமும் குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பலரும் இஸ்ரேல் ராணுவம் எல்லை கடந்து அத்துமீறி பறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஹோம்ஸ் பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என அந்த நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது இச்சம்பவம் குறித்த பகுதியில் மேலும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்