ஆரம்பித்தது பொருளாதார பிரச்சனை ! திருட்டு சீனா என ட்ரம்ப் குற்றசாட்டு

Report Print Trinity in ஏனைய நாடுகள்
70Shares
70Shares
lankasrimarket.com

சீனாவின் மீது அமெரிக்கா முன்பே இறக்குமதி வரிவிதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

முன்பு 34 பில்லியன் டாலராக இருந்த வரிவிதிப்பை இப்போது 200 பில்லியன் டாலராக அதிகரிக்க போவதாக ட்ரம்ப் தரப்பு கூறியிருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார போர் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது 25% வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. சீனாவும் பதிலடியாக கிட்டத்தட்ட அதே அளவு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது.

இரண்டு நாடுகளும் இதுபோல பொருளாதார மோதலில் இறங்கியுள்ள நிலையில், கோபமான ட்ரம்ப் சீன பொருட்கள் மீது 200 பில்லியன் டாலர் வரை வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று அதற்கான பொருட்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகள் ராபர்ட் லைடைசருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அறிவை திருடி அதனை தனது உற்பத்தி பொருளாக்கி என்பதுதான் டொனால்ட் ட்ரம்பின் குற்றசாட்டு. அதுமட்டும் இல்லாமல் அமெரிக்க கநிறுவனங்கள் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் சீனா நடந்து கொள்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி பேசாத சீனா கடந்த வெள்ளியன்று அமெரிக்க கார்கள் மற்றும் முக்கியமான விவசாய பொருட்கள் சோயா பீன்ஸ், இறைச்சி ஆகியவை மீதான வரியை அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் சீனா வர்த்தக அமைச்சகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது . அமெரிக்காவின் இந்த செயல்பாடு சீனாவையும் மொத்த உலகத்தையும், இறுதியாய் அமெரிக்காவையுமே அது பாதிப்படையச் செய்யும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்