தவறாக தொட்டவனுக்கு இளம்பெண் கொடுத்த தண்டனை: வீடியோவுக்கு குவியும் பாராட்டுகள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜார்ஜியாவில் தன்னை தவறாக தொட்டவனுக்கு இளம்பெண் கொடுத்த தண்டனைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக பணி புரியும் Emelia Holden (21) ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர் அருகில் சென்ற ஒருவன் அவரது பின்பக்கங்களைத் தொட்டு விட்டு செல்கிறான்.

உடனடியாக அவனது சட்டையின் பின் பக்கத்தைப் பிடித்த Emelia அவனை இழுத்துக் கீழே தள்ளி அவனைக் கடுமையாக எச்சரிக்கிறார்.

பின்னர் அவர் தன்னுடன் பணிபுரியும் உடன் ஊழியர்களை அழைத்து பொலிசை அழைக்கும்படி கூறுகிறார்.

இந்த காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளன. உடனடியாக விரைந்து வந்த பொலிசார் அந்த காட்சிகளைப் பார்வையிட்டதும் அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி வெளியானதும் சமூக ஊடகங்களில் பலரும் Emeliaவின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.

ஒருவர் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள் என்றும் மற்றொருவர் சரியான பதிலடி என்றும் பாராட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்