மகனுக்கு மனைவியாகப் போகும் பெண்ணின் கற்பை சோதித்த 47 வயது தந்தை! சொன்ன அதிரவைக்கும் காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1296Shares

மகனுக்கு வருங்காலத்தில் மனைவியாகப் போகும் பெண்ணின் கற்பை, அவரின் தந்தை சோதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனிசியாவின் Wonomulyo பகுதியில் இருக்கும் West Sulawesi-ஐ சேர்ந்த 47 வயது நபரே இந்த செயலை செய்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 16 வயது சிறுமி ஒருவர் West Sulawesi மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆண் நண்பர்களை கொண்டுள்ளனர். இதனால் தன்னுடைய கற்பை சோதிப்பதாக கூறி, வருங்காலத்தில் தன்னை திருமணம் செய்யவிருக்கும் மகனின் தந்தை, தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார்.

இப்படி அவர் என்னை பத்துக்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் மற்றும் சில வழக்குகளின் கீழ் அவரை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தந்தையின் செயலால் இந்த திருமணமும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்