வேடிக்கை பார்த்து கொண்டிருந்த குழந்தை மீது திடீரென்று பாய்ந்த சிங்கம்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சர்க்கஸ் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை மீது சிங்கம் பாய்ந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் தம்பதியினர் தங்களுடைய நான்கு வயது குழந்தையுடன் சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். சர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றினை வைத்து பயிற்சியாளர் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நான்கு வயது குழந்தை கூண்டிற்கு அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி குழந்தை மீது பாய்ந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் ஒரு வழியாக பயிற்சியாளர் சிங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி கூண்டின் அருகே நின்ற போது, சிங்கம் பாயந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.

சிறுமியின் முகத்தை சிங்கத்தின் கால் மற்றும் கை விரல்கள் பிராண்டியதில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers