வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன்..சொந்த ஊருக்கு திரும்பிய பின் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாயில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Malyala பகுதியின் Choppadandi பகுதியைச் சேர்ந்தவர் Karabuja Srinivas (37). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு Manjula Lakshmi என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு Vishita என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக துபாயில் வேலைக்கு சேர்ந்த ஸ்ரீநிவாஸ் அங்கு இரண்டு ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து அங்கு வேலை பார்த்து வந்த போது, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு திரும்பிய அவர் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த புதன் கிழமை இந்த தம்பதிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் சென்றுள்ளது.

இதனால் ஸ்ரீநிவாஸ் குழந்தையை வீட்டிற்கு வெளியே அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென்று தன்னுடைய மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அதன் பின் அவரும் அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டின் வெளியே இருந்த குழந்தை உறவினர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததால், விரைந்து வந்த உறவினர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்