4 ஆண்டுகளாக செய்த செயலால் வசமாக சிக்கிய ஜாம்பவான் ரொனால்டோ: என்ன தண்டனை தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டினோ ரொனால்டோ 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு நடந்து வரும் நிலையில் அவருக்கு 23 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2011ல் இருந்து 2014ஆம் ஆண்டு வரை ரொனால்டோ £5.3 மில்லியன் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதாவது இந்த காலக்கட்டத்தில் ஸ்பெயினில் €11.5 மில்லியன் வருமானம் மட்டுமே ஈட்டியதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரொனால்டோ 2013ல் மட்டும் €11.5 மில்லியனை விட சிறிது அதிகம் வருமானம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஸ்பெயின் தலைநகர் Madrid-ல் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் ரொனால்டோவுக்கு 23 மாதங்கள் சிறைதண்டனை (suspended) வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

அதாவது ரொனால்டோ சிறையில் தண்டனை அனுபவிக்க தேவையில்லை, இந்த காலக்கட்டத்தில் அவர் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருப்பதோடு அவருக்கு கொடுக்கப்படும் அபராத தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணையில் அபராத தொகை குறித்து கூறப்படும் என தெரிகிறது.

தற்போது இத்தாலியில் உள்ள ரொனால்டோ, தனியார் விமானம் மூலம் ஸ்பெயினுக்கு திங்கட்கிழமை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers