தீவிரவாதிகள் முகாமை இந்தியா அழிக்கவில்லையா? அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் சொல்லும் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதில் 300 தீவிரவாதிகள் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இறந்த தீவிரவாதிகள் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலும், பாகிஸ்தான் நாட்டிலும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்வேறு புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இப்போது வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் Mujahideen தீவிரவாதிகளின் முகாமை, இந்தியா அழிக்கவில்லை எனவும், அதற்கு அருகில் வந்தே குண்டு விழுந்ததாகவும், அங்கிருக்கும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சத்தமான வெடிப்பை கேட்டதை உறுதி செய்துள்ள உள்ளூர் மக்கள், இந்த வெடிப்பு சத்தம் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் வான் தாக்குதலை நிராகரித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி, அதனை இந்தியாவின் அரசியல் தேவைகளோடு தொடர்பு படுத்தி பேசியுள்ளார்.

இதற்கிடையே இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் படங்கள் வெளியில் செல்லாதவாறு பாகிஸ்தான் படை பாதுகாக்க முயலும்.

இதன் மூலம் இது பற்றிய பிற படங்களை அவர்கள் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு விவகார நிபுணரும், ஆசிரியருமான ஆயிஷா சித்திக் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்