3 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வரர்: பெற்றோர் செய்து வைத்த கொடுமை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஏமன் நாட்டு மக்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக அவதிப்பட்டு வருகின்ற நிலையில் 3 வயது சிறுமியை அவரது பெற்றோர் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக பெரிய கோடீஸ்வரருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

oxfam என்ற தொண்டு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து ஏமனில் உள்நாட்டு யுத்தம் நடந்து வருவதன் காரணமாக உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மோசமான செயல்களை செய்யும் அளவுக்கு மக்கள் ஆளாகிறார்கள். சமீபத்தில் 3 வயது சிறுமியை கோடீஸ்வரர் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுத்து அதற்கு பதிலாக இருப்பிடம் ழுமற்றும் உணவுப்பொருட்களை அச்சிறுமியின் பெற்றோர் வாங்கியுள்ளனர்.

தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை பணயம் வைத்து வாழும் நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்