அந்த குழந்தை என்னுடையதா? மொடல் அழகி மனைவியை கேள்வி கேட்கும் மலேசிய மன்னர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்ய மொடல் அழகியை மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளேயே விவாகரத்தும் செய்துவிட்ட மலேசிய மன்னர், அவருக்கு பிறந்த குழந்தைக்கு உண்மையாகவே தான்தான் தந்தையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசிய மன்னரான சுல்தான் முகம்மது, ரஷ்ய மொடல் அழகியான தனது மனைவி ஒக்சானாவை அவருக்கு தெரிவிக்காமலே தனது மத முறைப்படி விவாகரத்து செய்துவிட்டார்.

தங்களது உறவு குறித்த விடயங்களை ஒக்சானா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்ததாலேயே மன்னர் ஒக்சானாவை விவாகரத்து செய்ததாக மன்னர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு ரியாலிட்டி ஷோவின்போது, ஒக்சானா ஒரு ஆணுடன் நீச்சல் குளம் ஒன்றில் பாலுறவு கொள்ளும் காட்சிகளும், கவர்ச்சி உடையில் அவர் இருக்கும் படங்களும் வெளியாகின.

இதையடுத்து அரண்மனை வட்டாரத்தில் எதிர்ப்புகள் எழ, தனது மன்னர் பதவியை துறந்தார் சுல்தான்.

பின்னரும் ஒக்சானா தொடர்ந்து மன்னருடன் தான் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இந்நிலையில், மன்னரின் வழக்கறிஞர், மன்னர் சார்பில், ஒக்சானாவுக்கு பிறந்த குழந்தைக்கு உண்மையாகவே மன்னர்தான் தந்தையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காத ஒக்சானா, மீண்டும் தனது குழந்தையுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவனது உடலில் பெருமைக்குரிய மலேசிய இரத்தம் ஓடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய பதிவுகளில் எல்லாம் மன்னரை தனது கணவர் என குறிப்பிட்டு வந்த ஒக்சானா, இந்த பதிவுகளில் அவரைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers