அமேசான் காட்டுத்தீயை அணைக்க அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிய பிரேசில்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, ராணுவத்தை அனுப்ப பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அமேசான் காடுகளில் பற்றிய தீ மூன்று வாரங்களாக எரிந்து வருகிறது. சுமார் 55 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் படர்ந்திருக்கும் அமேசானில் இருக்கும் விலங்குகள், பறவைகள், தாவர இனங்கள் இந்த காட்டுத்தீக்கு இரையாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் லட்சக்கணக்கான மரங்கள் இதுவரை தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பிரேசில் அரசு கடுமையாக போராடி வருகிறது. அதேபோல் புவி வெப்பமயமாதலை பெருமளவு அமேசான் காடுகள் கட்டுப்படுத்துகின்றன என்பதால், உலக நாடுகள் இந்த காட்டுத்தீயை கண்டு அஞ்சமடைந்துள்ளன.

மேலும் பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமேசான் காட்டுத்தீயை அணைக்க ராணுவப் படைகளை அனுப்ப, பிரேசில் ஜனாதிபதி Bolsonaro உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் பிரேசில் ராணுவப் படையினர் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Carl de Souza/AFP

AP/Victor R.Caivno

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்