40 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்த சிறுமி.. பின்னர் நடந்த சம்பவம்! அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் கால்பந்து மைதானம் ஒன்றில், போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் 40 அடி உயர கேலரியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில், சாவ் பாலோ-ஜெரிமோ அணிகள் மோதின. இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததால், ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தது.

உள்ளூர் ரசிகர்கள் பலர் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது 13 வயது சிறுமி ஒருவர், 40 அடி உயரத்தில் இருந்த கேலரியில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்.

திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், குறித்த சிறுமி கால் தவறி கீழே தலைகீழாக விழுந்தார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அச்சிறுமியை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குறித்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பெரிய காயங்கள் ஏதும் இல்லாததால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி யார்? அவருடன் யார் வந்தார்கள் என்பது குறித்த விபரம் பொலிசாருக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்