வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணியின் கூடையில் இருந்தது என்ன? அதிகாரிகள் கண்ட காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இருவரின் கூடையை சோதித்து பார்த்த அதிகாரிகள் உள்ளே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தின் ராமநதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது பர்வேஸ். சிவகங்கையை சேர்ந்தவர் முகமது அக்பர். இவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் வந்துள்ளனர்.

அப்போது விமானநிலையத்தில் இருந்த அதிகாரிகள், இவர்கள் இரண்டு பேரும் வைத்திருந்த கூடையை சோதித்து பார்த்த போது, உள்ளே உயிருடன் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், உடும்புகள் மற்றும் மரப்பல்லிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் கொண்டுவந்த உயிரினங்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்கியல் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய அதிகாரிகள், பறிமுதல் செய்த கொடிய விஷம் கொண்ட பாம்புகள், உடும்புகளை மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்