சொந்த வீட்டை வெடி வைத்து தகர்த்து.. தீயணைப்பு வீரர்களை கொன்று குவித்த நபர்: விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த நாடகம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

இத்தாலியில் ஒருவர் சொந்த வீட்டுடன் காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களை வெடி வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீட்மாண்டின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதான Giovanni Vincenti என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடும் கடன் சுமையால் தத்தளித்த வந்த Giovanni Vincenti, தனது பண்ணை வீட்டிற்கு வெடி வைத்து தகர்த்து பொய்யான காப்பீடு தொகை பெற திட்டம் திட்டியுள்ளார்.

அதன்படி, பண்ணை வீட்டில் எரிவாயு குப்பிகளை வைத்து டைமருடன் இணைத்து வெடிக்கச் செய்துள்ளார். வெடிப்பு குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவியிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டாவது முறை மிகசக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி மீட்பு பணியில் ஈடுபட்ட மூன்று தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, Giovanni Vincenti-யை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், திட்டமிட்டு எரிவாயு வெடி வைத்து வீட்டை தகர்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் குப்பிகளுடன் இணைக்கப்பட்ட டைமரில் தவறு ஏற்பட்டதால் இரண்டாவது முறை வெடிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், தீயணைப்பு வீரர்களைக் கொல்லும் எண்ணம் இல்லை என்று புலனாய்வாளர்களிடம் Vincenti கூறியுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட Vincenti, முதல் வெடிப்பை அடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்களிடம், உண்மையை கூறி அவர்களது மரணங்களை தடுத்து இருக்கலாம் என்று இத்தாலிய வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

Vincenti-யின் படுக்கையறையில் டைமருக்கான கையேட்டை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக வழக்கறிஞர் கூறினார். Vincenti-யின் மனைவியும் தற்போது விசாரணையில் உள்ளார்.

தீயணைப்பு வீரர்களுக்கான இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், இத்தாலிய பிரதமர் உட்பட பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்