கொன்று புதைக்கப்பட்ட 47 ஆயிரம் உயிர்கள்... தென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு! வெளியான பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் கொரியாவில் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறு முற்றிலும் சிவப்பு நிறமாக மாறி பார்க்கவே ரத்த ஆறு போன்று இருப்பதால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் கடந்த சில தினங்கள் தென் கொரியாவி ரத்த ஆறு ஓடுகிறது என்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைக் கண்ட இணையவாசிகள் பலரும் இதில் நிறத்தினை கலந்திருக்கலாம், ஏமாற்று வேலை என்றெல்லாம் கூறி வந்தனர்.

( AFP/Getty )

இந்நிலையில் அது உண்மை என்பது தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் பரவி பன்றிக் காய்ச்சல் பரவுவதால், அதை தடுக்கும் முயற்சியில் 47 ஆயிரம் பன்றிகளை அதிகாரிகள் கொன்றுவிட்டு, அதன் பின் கொலை செய்யப்பட்ட பன்றியின் உடல்களை வடகொரியாவின் எல்லையை ஓட்டி இருக்கும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்துள்ளனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்று இருக்கும் பகுதியில் கன மழை தொடர்ந்து பெய்ததால், பன்றிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரில் மணல் கரைந்து, பன்றிகளின் ரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலக்கவே, ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது.

(AFP via Getty Images)

இந்த செய்தியை அறிந்தவுடன் அங்கிருக்கும் மக்கள் இந்த ஆற்று தண்ணீரால் ஏதேனும் தொற்று நோய் வந்துவிடுவோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதிகாரிகள் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்