குட்டை பாவடை அணிந்திருந்த பள்ளி மாணவிகள்... ரகசியகமாக வீடியோ எடுத்த ஆசிரியர்! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈக்குவாடாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகள் குட்டை பாவடை அணிந்திருக்கும் நிலையில், அதற்கு அடியில் தன்னுடைய மொபைல் போனை வைத்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அமெரிக்காவில் ஈக்குவாடாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவிகள் அங்கிருக்கும் மாணவி ஒருவரின் நோட்டை சரி பார்க்கிறார்.

அப்போது அவர் தான் கையில் வைத்து மொபைல் போனை, மாணவி குட்டை பாவடை அணிந்திருந்ததால் அதற்கு கீழே கொண்டு சென்று வீடியோ எடுத்துள்ளார்.

இதை அங்கிருக்கும் மாணவர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, வீடியோவைக் கண்ட பெற்றோர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து குறித்த வீடியோவில் இருக்கும் ஆசிரியர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வீடியோவை எடுத்த யார் என்பது தெரியவில்லை, அதுமட்டுமின்றி இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், யாரும் அந்த ஆசிரிய மீது புகார் கொடுக்கவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளி சீருடையில் குட்டை பாவடை அணிந்து செல்லும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களிம் எந்தளவிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுவதாக இணையவாசிகள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்