முடி திருத்தும் கடையில் 10 ஆண்டுகளாக மறைந்திருந்த 13 அடி நீள மலைப்பாம்பு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

10 ஆண்டுகளாக சீனாவில் முடிதிருத்தும் கடையில் மறைந்திருந்த மலைபாம்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் 12 அடி நீள மலைபாம்பு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் வானொலி மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாம்பு ஒன்று கட்டிடத்தில் இருப்பதாக வதந்தி பரவியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஊழியர்கள் சிலர் மலைப்பாம்பை பார்த்ததாக கூறியுள்ளனர்.

அங்கு வந்து செல்லும் சில வாடிக்கையாளர்களும் கூறியதை அடுத்து, கடையின் முதலாளி பாம்பை பிடிக்க ஆள் வைத்துள்ளார்.

ஆனால் பாம்பு இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் மலைப்பாம்பை இருப்பிடத்தை கண்டறிந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 12 அடி நீளமும் 19 கிலோகிராம் (42 பவுண்டுகள்) எடையும் கொண்ட மலைப்பாம்பை 5 நிமிடங்களில் பிடித்து சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்