நித்தியானந்தாவின் கோரிக்கையை நிராகரித்த ஈக்வடார அரசு! வெளியான அறிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
568Shares

இந்தியாவை விட்டு தப்பி ஓடி ஈக்வடாரில் இருப்பதாக கூறப்பட்ட நித்தியானந்தா, அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் எனவும், அவரின் கோரிக்கையை ஈக்வடார் அரசாங்கம் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

இதன் கிளைகள் இந்தியா, வெளிநாடு போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் நித்தியானந்தா பொலிசாரால் தேடப்பட்டு வந்தார்.

அப்போது நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே இருக்கும் தீவு ஒன்றை நித்தியானந்தா வாங்கிவிட்டதாகவும், அதற்கு கைலாஷ் என்று பெயர் வைத்து தனி நாடு அமைக்கப்போவதாக, நித்தியானந்தாவின் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இதையடுத்து தற்போது, நித்யானந்தாவின் அடைக்கலம் கோரிக்கையை மறுத்துவிட்டதாக ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் மறைமுகமாக ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நித்யானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு (அடைக்கலம்) கோரிக்கையை ஈக்வடார் அரசு மறுத்து உள்ளது.

நித்யானந்தாவுக்கு ஈக்வடார் தஞ்சம் வழங்கியது அல்லது ஈக்வடார் அருகே உள்ள எந்தவொரு நிலத்தையும் தீவையும் வாங்குவதற்கு ஈக்வடார் அரசாங்கம் உதவி செய்துள்ளது என்ற செய்திகள் திட்டவட்டமாக மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்