என்னுடைய மரணதண்டனையை கேட்டேன்! தீர்ப்புக்கு பின் படுக்கையில் இருந்த படி முஷாரப் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாராப் மீதான தேச துரோக வழக்கில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தண்டனை குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதியுமான பர்வேஸ் முஷாரப் பதவியில் இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் திகதி அவசர நிலை பிரகடனம் செய்தார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் கடந்த 17-ஆம் திகத் தீர்ப்பு வழங்கியது, அதில் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் துபாயில் சிகிச்சை பெற்று வரும் பர்வேஸ் முஷாரப் படுக்கையில் இருந்த படி இந்த தீர்ப்பு குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.

அதில், நான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலமாக கேட்டேன், இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாதத்தையும், தனக்காக வாதடி வரும் வழக்கறிஞரின் வாதங்களையும் கேட்கவில்லை, நான் துபாயில் சிகிச்சை பெற்று வருவதால் என்னுடைய அறிக்கையை பதிவு செய்வதற்காக ஒரு சிறப்பு குழு ஒன்றை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.

தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி, மேலும் இது குறித்து தன்னுடைய சட்டக் குழுவினருடன் ஆலோசித்த பின்னர் தனது அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

நான் பாகிஸ்தானின் நீதித்துறையை மதிக்கிறேன், எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்றும் கூறியிருந்தேன். நானும் அதை நம்புகிறேன். ஆனால் இது சில தனிப்பட்ட சொந்த பகை காரணமாக எடுக்கப்பட்டது, இதனால் நீதிமன்றத்தின் இந்த முடிவு சந்தேகத்திற்குரியது என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...