துருக்கியை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

துருக்கியின் கிழக்கு மாகாணமான எலாசிக் பகுதியில் ரிக்டர் அளவில் 6.8 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது குறைந்தது 18 பேரின் உயிரைப் பறித்துள்ளது மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சுமார் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அண்டை மாகாணங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடும் குளிரில் விளக்குகளுடன் இருட்டில் மீட்புக் குழுக்கள் பணியாற்றிவருவதாக கூறும் பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், துருப்புக்களும் உதவ தயாராக உள்ளனர் என்றார்.

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாக அல்லது சேதமடைந்த வீடுகளுடன் உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஆபத்தான நிலையில் இருக்கும் 11 பேர் உட்பட மொத்தம் 553 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இரு மாகாணங்களில் மொத்தமாக 30 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்