சவப்பெட்டியில் படுத்திருந்தவரை பார்த்து அழுத குடும்பத்தார்! பின்னால் வந்து தோளில் கைவைத்த நபரால் ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் நபரின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது அவர் அந்த இடத்துக்கு உயிருடன் நடந்து வந்ததை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

வடக்கு தாய்லாந்தை சேர்ந்தவர் பிரபட் சனிக்ட்னம். இவர் தனது தந்தை சுச்சர்ட் உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பிரபட் இரயில் மோதி இறந்த நிலையில் அவரின் சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.

அந்த இடத்தில் அதிகளவு உறவினர்களும், நண்பர்களும் வந்து அழுது கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இறந்ததாக கூறப்பட்ட பிரபட் அந்த இடத்துக்கு நடந்து வந்து குடும்பத்தார் தோள் மீது கை வைத்தார். அவரை பார்த்த சுச்சர்ட் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அப்படியென்றால் சவப்பெட்டியில் சடலமாக கிடப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையடுத்து அங்கு பொலிசார் வந்து விசாரணை நடத்தி போதே அனைத்து உண்மைகளும் தெரியவந்தது.

அதாவது சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட பிரபட் அழுக்கு உடையுடன் வீட்டின் அருகில் இருக்கும் இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேறு ஒரு நபரும் பிரபட் அணிந்திருந்த அதே நிறத்திலான உடையை அணிந்து கொண்டு அங்கு வந்த போது இரயில் அவரை தாக்கியது.

இதில் அவர் உயிரிழந்ததை பிரபட் இறந்ததாக அனைவரும் நினைத்து கொண்டது தெரியவந்தது. இறந்த நபரும் பிரபட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உருவத்தை கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உண்மையில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்