வடகொரியாவுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்! அதிபர் கிம் ஜாங் எடுத்த அதிரடி முடிவு.... குவிந்த பாராட்டுகள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதை அடுத்து அந்நாட்டு அரசின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் முடிவெடுத்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தலைமையிலான வடகொரிய அரசின் செயல் திட்டங்களும் உலகிற்கு தெரியாத அளவுக்கு ரகசியமாகவே இருப்பதாக பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன.

அதற்குத் தகுந்தாற்போல், சமீபத்தில் கிம் பற்றிய எந்த தகவலும் முதலில் வெளியே வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் வடகொரிய அதிபருக்கு உடல்நிலை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருக்கிறது என்று தென் கொரியா தெரிவித்தது.

இந்நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதை அடுத்து அந்நாட்டு அரசின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதனால் வேறு வழி இல்லாமல் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வடகொரிய அதிபர் வலியுறுத்தி வந்தார்.

இதனை அடுத்து அவரின் இந்த கொள்கை முடிவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வடகொரிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

இதேபோல் வடகொரிய அதிபர் கிம்மின் அறிவுறுத்தலை தாமதப்படுத்தாமல், நம்போ நகரில் உள்ள விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் வயல்வெளியில் நாற்று நடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்