99 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்! சுகாதார அமைச்சம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 97 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2 உயிர் தப்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம் நகரின் விமான நிலையத்தில் தரையிறங்க பலமுறை அணுகிய போது கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு இரவு முழுவதும் மீட்பு பணி இடம்பெற்றது.

விபத்து நடந்த இடத்திலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சிந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லாகூரிலிருந்து கராச்சிக்கு பயணித்த விமானம் பிற்பகல் 2:30 மணிக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததாக PIA விமான நிறுவனம்தெரிவித்துள்ளது.

ரமலான் பண்டிகையை கொண்டாட பாகிஸ்தானியர்கள் பலரும் நகரங்கள் கிராமங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல தயாராகி வரும் நிலையில் இக்கோர விபத்து நடந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்