பாகிஸ்தானில் பொலிசார் சீருடையில் தீவிரவாதிகள் தாக்குதல்! இதுவரை 7 பேர் மொத்தமாக பலி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளுடன் சேர்த்து மொத்த 7 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்களின்படி, தாக்குதல் நடத்திய நான்கு பேர் கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்திய அனைவரையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றனர். அதற்கு முன்னர் பொதுமக்களில் மூன்று பேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

கராச்சியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நான்கு பயங்கரவாதிகளும் பங்குச் சந்தையில் நுழைய முயன்றனர். முதலில் பயங்கரவாதிகள் நுழைவு வாயிலை கையெறி குண்டு மூலம் தாக்கினர். அதன் பிறகு உள்ளே நுழைய முயன்றனர். இதன் பின்னர், நான்கு பயங்கரவாதிகளையும் பொலிசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டனர்.

பயங்கரவாதிகள் அனைவரும் பொலிஸ் சீருடையில் இருந்தனர். இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதிகள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்