ஸ்காட்லாந்தில் பெரும் ரயில் விபத்து: குவிந்த 30 ஆம்புலன்ஸ்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்காட்லாந்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதையடுத்து, அப்பகுதியில் 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்லன.

ஸ்காட்லாந்தின் Aberdeen நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி, 10 மணிக்கு சற்று முன்பு அந்த ரயில் தடம்புரண்டதாக தெரிகிறது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ரயில் தடம்புரண்ட இடத்திலிருந்து கரும்புகை எழும்புவதையும், அப்பகுதியில், ஹெலிகொப்டர் உட்பட 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

நேற்றிரவு அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரயில் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

விபத்து நடந்து சிறிது நேரமே ஆகியுள்ளதால், அங்கு என்ன நடந்தது, எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என்பது குறித்த எந்த அதகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்