துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த கும்பல்: இரத்தவெள்ளத்தில் சரிந்த மாணவர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், பாடசாலை ஒன்றில் புகுந்து மர்ம கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பிஞ்சு பிள்ளைகள் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் மிகுந்த அந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 8 மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பிராந்தியத்தின் கும்பா நகரில் அமைந்துள்ள அந்த பாடசாலையில் மதிய நேரம்,

மோட்டார் சைக்கிள்களிலும், பொதுமக்கள் உடைகளிலும் வந்த ஆயுததாரிகள், கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 8 காயங்களுடன் தப்பியுள்ளனர்.

உயிர் பயத்தில் சில மாணவர்கள் இரண்டாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்கில், ஆங்கிலம் பேசும் மக்களால் அம்பாசோனியா என்று அழைக்கப்படும் ஒரு அரசை உருவாக்க முற்படும் பிரிவினைவாத குழுக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் போராட்டத்துடன் இந்த தாக்குதல் தொடர்புபட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த பிராந்தியத்தில் இது ஒரு மோசமான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2017 முதல் நூற்றுக்கணக்கானோர் இந்த மோதல்போக்கால் இறந்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர், பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்