வெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு! வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
528Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகின்றனர். இன்று வரையும் வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.

அதன் படி கடந்த 8-ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை அமிர்தலிங்கம் என்பவர் கடந்த 8-ஆம் திகதி மூன்று பேருடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சுற்றுலா விசா மூலம் சென்றுள்ளார்.

அவர் துபாயில் இருக்கும் Hor Al Anz-ல் தங்கியுள்ளார். மறுநாள் காலை வேலைக்கு சென்ற அவர் அதன் பின் மாலை நேரத்தில் திரும்பி வந்துள்ளார். இரவு நேரத்தில் அவருடன் இருந்த நண்பர்கள் வேலைக்கு செல்ல, அவர் தனியாக இருந்ததால், மீண்டும் தான் வேலைக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால், நண்பர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு செல்ல, அமிர்தலிங்கம் அறையில் தனியாக தங்கி வந்துள்ளார். ஆனால் திரும்பி வந்து பார்த்த போது அமிர்தலிங்கம் அங்கு இல்லை, இதனால் அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

அவரிடம் சிம் கார்டு இல்லாத காரணத்தினால், வீட்டையும் தொடர்பு கொள்ளவில்லை. குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லாத காரணத்தினால், அமிர்தலிங்கத்தின் மருமகன் துரை மணிராஜா, அங்கிருக்கும் அவரின் மைத்துனரான கண்ணன் நாகூர்கானி தெரிவித்துள்ளார்.

கடந்த 9-ஆம் திகதி காணமல் போன நிலையில், இது குறித்து அங்கிருக்கும் பொலிசாரிடம் கண்ணன் நாகூர்கானி கடந்த 16-ஆம் திகதி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், அவர் மருத்துவமனை ஒன்றில் இருப்பதாக பொலிசார் கண்ணன் நாகூர்கானிக்கு தெரிவித்துள்ளனர்.

அமிர்தலிங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவருக்கு சனிக்கிழமை துபாய் பொலிசரிடம் அழைப்பு வந்ததாகவும், நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன், ஏனெனில் அவரை இப்போதைக்கு பார்க்க முடியாது என்று பொலிசார் கூறியதாக கூறப்படுகிறது.

இன்று காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணைக்கு பின்னரே அவரை பார்க்க முடியும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அமிர்தலிங்கம் இங்கு வந்தவுடன் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டார்? என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை.

இருப்பினும் அவர் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உடனடியாக தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் எங்களுக்கு உதவிய பொலிசாருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்