நீச்சல் குளத்தில் தவறி விழுந்து போராடிய பார்வையற்ற நாய்! படாதபாடுபட்டு தனியாளாக மீட்ட மற்றொரு நாய்: நெஞ்சை உருக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
2846Shares

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை, மற்றொரு நாய் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் காப்பாற்றிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அர்ஜென்டினாவில் இச்சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்த நபர் ஒருவர் Caipirinha மற்றும் Luna (பார்வையற்ற நாய்) என இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வீட்டின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் Luna தவறி விழுந்துள்ளது.

இதைக் கண்ட Caipirinha, Luna-வை குளத்திலிருந்து மீட்க போராடியுள்ளது. பலமுறை Luna-வை இழுத்து மீட்கும் போது அது மீண்டும் குளத்திற்குள் விழுந்துள்ளது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் Luna-வை கழுத்தில் கவ்வி Caipirinha மீட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து அந்த நீச்சல் குளம் மூடப்பட்டதாக நாயின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்