ஜாக்மா உயிருடன் இருக்கிறார்... வெளியான புதிய காணொளி: கருப்பு உடை சீனா எதிர்ப்பு அறிகுறியா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
273Shares

சீன அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சனம் செய்ததன் சில நாட்களில் மாயமான அலிபாபா நிறுவனரும் பில்லியனருமான ஜாக்மா 4 மாதங்கங்களுக்கு பின்னர் வெளியே வந்துள்ளார்.

ஜாக்மாவை சீனா அரசாங்கம் கைது செய்ததாகவும், ரகசிய முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வலுப்பெறும் நிலையிலேயே ஜாக்மா காணொளி மூலம் சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார்.

சீனாவின் கிராமப்பகுதி ஆசிரியர்களை பாராட்டும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டு, நீண்ட 4 மாத கால விவாதங்களுக்கு ஜாக்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சீனா அரசாங்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்ட சில விமர்சனங்களுக்கு பிறகு திடீரென்று ஜாக்மா மாயமானார்.

தலைநகர் பீஜிங்கில் வரவழைக்கப்பட்ட ஜாக்மா அதிகாரிகள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் என்ற தகவலே கடைசியாக ஜாக்மா தொடர்பில் வெளிவந்தது.

ஜனாதிபதி ஷி ஜின்பிங் நிர்வாகத்தை விமர்சனம் செய்த ஜாக்மாவுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் சர்வதேச சமுதாயம் கவலையை பதிவு செய்தும் வந்தது.

இந்த நிலையில், கிராமங்களில் காணப்படும் கல்வி முறை தொடர்பில் ஜாக்மா காணொளி ஒன்றை வெளியிட்டு, ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளார்.

2015 முதல் கிராமங்களில் சிறப்பான பங்காற்றும் 100 ஆசிரியர்களை ஆண்டு தோறும் தெரிவு செய்து அவர்களுக்கு ஜாக்மா அறக்கட்டளை சார்பாக தலா 1 மில்லியன் ரூபாய் பரிசுத்தொகை அளிப்பதுடன், அடுத்த மூன்றாண்டு காலம் அவர்களின் கல்வி மற்றும் ஆய்வுகளுக்கான அனைத்து தேவைகளையும் அறக்கட்டளை ஏற்கும்.

ஆனால், ஜாக்மா தற்போது வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள்,

ஜாக்மா அணிந்திருந்த கறுப்பு உடை மற்றும் அவரது முகத்தில் சோகம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனா நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து ஜாக்மா காணொளியில் தோன்றினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்