ஒரே இரவில் 1700 பேரின் உயிரை பறித்த ஏரி!... தொடர்ந்து நீடிக்கும் மர்மம்

Report Print Fathima Fathima in ஏனையவை

ஒரே இரவில் 1746 மனித உயிர்களை பறித்த ஏரியை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இந்த இயற்கை பேரழிவை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

மத்திய ஆப்ரிக்காவில் உள்ள ஏரி நயோஸ், வழக்கமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஏரி தான் என்றாலும் இதனால் ஏற்பட்ட பேரழிவு வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இரவு 9 மணியளவில் அந்த ஏரியை சுற்றியுள்ள ச்சா, நயோஸ், மற்றும் சுபும் ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு திடீரென சுவாசிக்க முடியாமல் போனது.

அந்த ஏரியை சுற்றி சுமார் 25 கி.மீ தூரத்துக்கு மக்களால் சுவாசிக்க முடியவில்லை,

சிலர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர், என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்பே சிலரின் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் கசிய தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நபராக மயங்கி விழுந்து உயிரை விட்டனர், சிலர் உயிர்பிழைத்தனர்.

ஆனால் யாருக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, இந்த சூழ்நிலை சுமார் 3 மணி நேரத்திற்கு பின்புதான் சரியானது.

அதன் பின்பு மயங்கியவர்களில் சிலர் மட்டும் முழிக்க துவங்கினர். பலர் மயக்கத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

இதுதொடர்பாக எவ்வளவோ ஆய்வுகள் நடந்தும் இன்னும் மர்மங்கள் தொடர்கின்றன...

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்