“பறக்கும் மங்கை” தீபாவுக்கு வாழ்த்து கூறிய சச்சின்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறி நூலிழையில் பதக்கத்தை வாய்ப்பை தவறவிட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

“விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஓர் அங்கமே. உங்களது கடின உழைப்பால நீங்கள் பல லட்சம் இதயங்களை வென்று விட்டீர்கள். உங்களுடைய சாதனைக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தவிர, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தீபா கர்மாகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments