உலகளவில் 83வது இடம்பிடித்த விராட் கோஹ்லி: எதில் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 83வது இடத்தை பிடித்துள்ளார்.

பிரபல இதழான போபர்ஸ் விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 83வது இடத்தில் உள்ளார்.

விராட் கோஹ்லி கடந்த ஆண்டு 2.38 மில்லியன் டொலர் சம்பாதித்தார். இதன்மூலம், அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் பி.சி.சி.ஐ விராட் கோஹ்லிக்கு சம்பளத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருவதால், இந்தளவு அவர் சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல குத்துச்சண்டை வீரர் மேவெதர் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்தாண்டு 28.32 மில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தார். பிரபல கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும், பெண் வீராங்கனைகள் யாரும் இந்தாண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rupak De Chowdhuri/Reuters

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers