இந்திய தேசிய கீதத்தை பாடியது இதற்காகதான்: பாகிஸ்தான் ரசிகர் விளக்கம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய தேசிய கீதத்தை பாடியது ஏன் என பாகிஸ்தான் ரசிகர் விளக்கமளித்துள்ளார்.

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பாகிஸ்தான் ரசிகர் ஒருவரும் சேர்ந்து பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அடில் தாஜ் எனும் அந்த ரசிகர் இந்திய தேசிய கீதத்தை பாடியபோது, தோளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்திக்கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த இருநாட்டு ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிலையில் அடில் தாஜ் இதுகுறித்து கூறுகையில், ‘எனது அருகில் இருந்த சில இந்திய ரசிகர்கள், எங்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செய்ததைப் பார்த்தேன்.

இதைத் தொடர்ந்து நானும் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை செய்தேன். இருநாட்டு அமைதிக்கும் இது ஒரு சிறு முயற்சி. நாளை(இன்று) நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இரண்டு நாடுகளின் தேசிய கொடிகளையும் கொண்டு வர இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்