அணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்கணும் என்றாலும் நான் செய்வேன்: விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அணிக்காக தான் ஆறு முறை கூட ஒரு ஓவரில் டைவ் அடிக்க தயார் என, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம், சச்சினின் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்காக விளையாடுவது தனது கடமை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

‘நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்த விடயங்கள் எனக்கு முக்கியமில்லை. ஆனால், என் கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன் என புரிந்துகொள்ள உதவுகிறது.

பத்து ஆண்டுகள் என்பது சிறப்பானது. நான் இந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறேன். இன்னும் அதிகம் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். நான் சோர்வாக, மனதளவில் தயாராக இல்லாதது ஆகியவற்றை விட ஒரு ரன் கூடுதலாக அடிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

அணிக்கு என்ன தேவையோ அதை செய்வது தான் எனது நோக்கம். அணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் நான் நிச்சயம் செய்வேன். ஏனென்றால் அது தான் என் கடமை. அதற்கு தான் நான் நாட்டுக்காக ஆட தெரிவு செய்யப்பட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers