மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஸ்மித், வார்னர்?

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்மித், வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் அவமானப்படுத்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இருவர் மீதும் விதிக்கப்பட்ட தடை நீங்கியதை அடுத்து, அணிக்கு திரும்பி உலககிண்ணம் போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கிண்ணம் போட்டிக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில், இன்று இங்கிலாந்து அணியும், அவுஸ்திரேலிய அணியும் மோதின.

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துவக்க ஆட்டக்கார்ககளாக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் பின்ச் 14 ரன்களிலும், டேவிட் வார்னர் 43 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

வார்னர் வெளியேறிய சமயத்தில், ஸ்மித் மைதானத்திற்குள் நுழைந்தார். இருவரையும் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென "ஏமாற்றுக்காரர்கள்" என கூச்சலிட ஆரம்பித்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாத ஸ்மித் 102 பந்துகளில் 116 ரன்களை குவித்து அசத்தினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers