அன்று சிரித்து பேசிகொண்டிருந்தோம்! தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தற்கொலை குறித்து அதிர்ச்சியடைந்த இலங்கை வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இலங்கை முன்னாள் வீரர் அர்னால்டு கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ஓட்டங்கள் எடுத்துள்ள சந்திரசேகர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 4,999 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதோடு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், சந்திரசேகர் இறப்பு செய்தி அதிர்ச்சியை கொடுக்கிறது.

அறிவாளியாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் அவர் இருந்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று கூட டி.என்.பி.எல் போட்டியின் போது நாங்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டிருந்தோம், அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்