சுச்ன் இல்ல... அது சச்சின்.! ட்ரோல் பீஸாக மாறிய அமெரிக்க ஜனாதிபதியின் 'நமஸ்தே டிரம்ப்' உரை!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
325Shares

அகமதாபாத்தில் உள்ள மொட்டெரா மைதானத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் சரமாரியாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

நேற்று இந்திய வந்த டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் உரையாற்றினார்.

தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் என நேரலையில் கோடிகணக்கான மக்கள் டிரம்பின் உரையை பார்த்தனர்.

டிரம்ப் தனது உரையின் போது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு பாராட்டினார்.

இதன் போது மைதானத்திலிருந்து மக்கள் கூட்டம் மிகுந்த ஆரவாரத்துடன் டிரம்பின் உரையை வரவேற்றது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்ததால் சமூக ஊடகங்களில் எதிர்வினை கிளம்பியது.

சச்சின் பெயரை மட்டுமின்றி தத்துவ ஞானி சுவாமி விவேகானந்தர் பெரையும் டிரம்ப் தவறாக உச்சரித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளரான பியர்ஸ் மோர்கனுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியை ட்ரோல் செய்தார்.

பீட்டர்சன் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் ஆணையமாக ஐசிசி, ஐயர்லாந்து கிரிக்கெட் மற்றும் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் ஆகியோரும் அமெரிக்க ஜனாதிபதியை ட்ரோல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்