கூகுள் குரோம் இணைய உலாவி பயன்படுத்துபவரா நீங்கள்?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
101Shares
101Shares
ibctamil.com

உலக அளவில் இன்று இணைய உலாவலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரே ஒரு உலாவியாக கூகுள் குரோம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக கூகுள் குரோமினை இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்கள் மற்றும் ஹேக்கிங் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் குரோம் பாவனையாளர்கள் அதிக அளவில் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.

இதனை தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளது.

அதாவது குரோம் உலாவியல் மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் நிறுவப்படுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த மூன்றாம் தரப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தியே அதிக அளவில் சட்டவிரோத செயற்பாடுகள் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யும் குரோம் 66 பதிப்பில் இதற்கான தடை ஆரம்பமாகவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்